ஜனாதிபதியின் தவறான முடிவே 22 மில்லியன் மக்கள் துன்பங்களை அனுபவிக்கின்றனர்
4 view
கொழும்பு, ஏப் 23 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறான முடிவுகள் காரணமாகவே 22 மில்லியன் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்று பேட்டியளித்துள்ள சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தலைவலிக்கு தலையணை மாற்றுவது போல் புதிய அமைச்சரவையை நியமித்துள்ளதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது எனக் கூறியுள்ளார். அனைத்து கட்சிகளும் இணைந்து இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கி இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றிருக்க வேண்டும் என்று தற்போது ஜனாதிபதி தவறை ஏற்றுக்கொண்டுள்ளார். கமத்தொழிலாளர்களுக்கு இரசாயன பசளையை வழங்காது தொடர்பான தவறையும் தற்போதே அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அப்படியானால், நாட்டின் 22 மில்லியன் மக்கள், ஜனாதிபதி உட்பட ஆளும் தரப்பினரின் தவறு காரணமாக துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். தவறு நடந்துள்ளது என்று கூறினால், ராஜினாமா செய்ய வேண்டும். சர்வதேச நாணயத்திற்கு செல்லவிடாது தடுத்தவர் அஜித் நிவாட் கப்ரால்.…
The post ஜனாதிபதியின் தவறான முடிவே 22 மில்லியன் மக்கள் துன்பங்களை அனுபவிக்கின்றனர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதியின் தவறான முடிவே 22 மில்லியன் மக்கள் துன்பங்களை அனுபவிக்கின்றனர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
