மே தினத்தில் போராட்டம் வலுக்கும்!சுதந்திரக் கட்சியினர் தீர்மானம்
4 view
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி மே முதலாம் திகதி, தொகுதி மட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை மே தின நிகழ்வுகளை நடத்துவதில்லை என்றும், அதற்கு பதிலாக அரசை இராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி நாடு முழுவதும் தொகுதி மட்டத்தில் போராட்டங்களை நடத்தவும் சுதந்திரக் கட்சி முடிவெடுத்துள்ளது.
The post மே தினத்தில் போராட்டம் வலுக்கும்!சுதந்திரக் கட்சியினர் தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மே தினத்தில் போராட்டம் வலுக்கும்!சுதந்திரக் கட்சியினர் தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
