நாட்டிலுள்ள பதுக்கல் வியாபாரிகளினால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு?
5 view
மாதம் தோறும் 5 பவுசர் பெற்றோல் மாத்திரமே பயன்படுத்தப்பட்ட நிலையில், மாதம் முடிவடைவதற்கு முன்னர் 8 பவுசர் பெற்றோல் கொண்டுவரப்பட்டாலும் பெற்றோலுக்கான கேள்வி அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதன் காரணமாகவே மக்கள் இன்னும் நீண்ட வரிசைகளில் பெற்றோலுக்காக காத்திருப்பதையும் அறிய முடிகின்றது. இன்று அம்பாரை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையிலே இத்தகவலை அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் மூலமாக அறியக்கிடைத்தது. அம்பாரை மாவட்டத்தில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் வழங்கப்படும் நிலையில் எரிபொருளுக்கான கேள்விகள் அதிகரித்தவாறே உள்ளது. இந்நிலையில் எரிபொருள் வழங்கும் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசைகளில் மக்கள் தொடர்ந்தும் காத்திருப்பதையும் எரிபொருள் கொண்டுவரும் வாகனத்தை கூட குழுமியிருந்து வரவேற்று பார்வையிடும் நிலையினையும் காண முடிகின்றது. ஆலையடிவேம்பு பல நோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று நண்பகல் முதல் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக அதிகமான மோட்டார் சைக்கிள்கள் மற்றும்…
The post நாட்டிலுள்ள பதுக்கல் வியாபாரிகளினால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டிலுள்ள பதுக்கல் வியாபாரிகளினால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
