இன்று, நாளை மின் துண்டிப்பு குறித்த அறிவிப்பு!
13 view
நாட்டில் இன்றும் நாளையும் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று சனிக்கிழமை 3 மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிப்படவுள்ளது. A முதல் W வரையான வலயங்களில் இன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. அத்துடன் நாளைய தினம் 3 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, காலை 9 மணிமுதல் மாலை 5.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், மாலை 5.20 முதல் இரவு 9.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post இன்று, நாளை மின் துண்டிப்பு குறித்த அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று, நாளை மின் துண்டிப்பு குறித்த அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
