உக்ரைன் வெள்ளைக் கொடியை ஏற்றுவதன் மூலம் சண்டை நிறுத்தத்தை தொடக்கிவைக்க வேண்டும்: ரஷ்யா!
26 view
உக்ரைனின் மரியுபோல் நகரில் தங்களால் முற்றுகையிடப்பட்டுள்ள, அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கியுள்ள உக்ரைன் படையினார், வெள்ளைக் கொடியை ஏற்றுவதன் மூலம் சண்டை நிறுத்தத்தை தொடக்கிவைக்க வேண்டும் என ரஷ்யா கூறியுள்ளது. ஆலையிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக சண்டை நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக கூறியுள்ள ரஷ்யா, இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சக தேசியக் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகயீல் மிஸின்ட்ஸெவ் கூறுகையில்,‘முற்றுகையிடப்பட்டுள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையைச் சுற்றிலும் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். அந்த ஆலைக்குள் பதுங்கியுள்ளதாகக் கூறப்படும் பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக இந்த சண்டை நிறுத்ததை நாங்கள் மேற்கொள்வோம். ஆனால், அந்த ஆலையில் இருக்கும் உக்ரைன் படையினர் வெள்ளைக் கொடியை ஏற்றினால்தான் சண்டை நிறுத்தம் தொடங்கும். அஸோவ்ஸ்டல் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் எங்கள் பார்வைக்குத் தெரியும்படி எப்போது உக்ரைன் படையினர் வெள்ளைக் கொடி ஏற்றுகிறார்களோ, அப்போதிலிருந்து சண்டை நிறுத்தம் தொடங்கிவிடும்.…
The post உக்ரைன் வெள்ளைக் கொடியை ஏற்றுவதன் மூலம் சண்டை நிறுத்தத்தை தொடக்கிவைக்க வேண்டும்: ரஷ்யா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உக்ரைன் வெள்ளைக் கொடியை ஏற்றுவதன் மூலம் சண்டை நிறுத்தத்தை தொடக்கிவைக்க வேண்டும்: ரஷ்யா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
