பட்லர் சதம்: ராஜஸ்தானிடம் போராடி வீழ்ந்தது டெல்லி அணி!
13 view
ஐ.பி.எல். ரி-20 தொடரின் 34ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 15 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் ஐந்தில் வெற்றி, இரண்டில் தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் டெல்லி கெபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதுவே நடப்பு தொடரின் அணியொன்றின் அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் 116 ஓட்டங்களையும் தேவ்தத் படிக்கல் 54 ஓட்டங்களையும் சஞ்சு சம்சன் ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். டெல்லி கெபிடல்ஸ் அணியின் பந்துவீச்சில், காலீல் அஹமட் மற்றும் முஷ்டபிசுர் ரஹ்மான்…
The post பட்லர் சதம்: ராஜஸ்தானிடம் போராடி வீழ்ந்தது டெல்லி அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பட்லர் சதம்: ராஜஸ்தானிடம் போராடி வீழ்ந்தது டெல்லி அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
