தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் விசேட அறிவிப்பு.
15 view
தேசிய வளிமண்டலவியல் நிலையத்தினால் வெளியிடப்பட்ட இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் விசேட அறிவிப்பு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் விசேட அறிவிப்பு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
