தாம் செய்தது தவறு என ஒப்புக்கொண்டார் மகிந்த

39 view
றம்புக்கணயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு தொடர்பில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாததன் தவறை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஒப்புக்கொண்டுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு பிரதமர் அழைக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை தெளிவுபடுத்திய பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவரால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, இந்தக் கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் அதில் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார். றம்புக்கண சம்பவம் தொடர்பான தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது தனது தவறு எனத் தெரிவித்த அவர், எவ்வாறாயினும், இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் தமக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள பாதை…
The post தாம் செய்தது தவறு என ஒப்புக்கொண்டார் மகிந்த appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース