கோட்டாவுக்கு மக்கள் மீது பாசம் இருந்தால் இராஜினாமா செய்ய வேண்டும்-றிசாட் கோரிக்கை!

28 view
கோட்டாவுக்கு நாட்டு மக்கள் மீது பாசம் இருந்தால் மக்களின் வேண்டுகோளை ஏற்றுஇ தன்னுடைய பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று காலை (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி ஆவதற்கு முன்னரே கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை ஆட்சி செய்வதற்கு தகுதியற்றவர் என நாங்கள் பல தடவை கூறி இருக்கிறோம். கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா, நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் ஒருமுறை கருத்து தெரிவிக்கையில், “பைத்தியக்காரன் ஒருவன் நாட்டின் ஜனாதிபதியாகி, அவரிடம் இவ்வளவு அதிகாரங்களும் ஒப்படைக்கப்படுமானால், இந்த நாடு குட்டிச்சுவராகி, நாசமடைந்துவிடும்” என்றார். இன்று நான் அவ்வாறு சொல்லவில்லை, வீதிகளிலும் காலி முகத்திடலிலும் பல நாட்களாக ஆர்ப்பாட்டம் செய்து வருபவர்கள் கோட்டாவுக்கு எதிராக கோஷமிடுவதுடன், “கோட்டா கோ ஹோம்” எனக் கூறுகின்றனர். இவர்களில் புத்திஜீவிகள்,…
The post கோட்டாவுக்கு மக்கள் மீது பாசம் இருந்தால் இராஜினாமா செய்ய வேண்டும்-றிசாட் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース