நிதி இல்லாத இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும் -இரா.துரைரெட்ணம்
20 view
பொருள் கொள்வனவிற்கே நாட்டில் நிதி இல்லாத நிலையில் அதிகாரமற்ற இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார். மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் வழங்கப்பட்ட புதிய அமைச்சரவை விடயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, அரசாங்கத்திற்குச் சார்பாகச் செயற்பட்ட இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் குறைந்த, இராஜாங்க அமைச்சர் பதவியும், இந்த அரசாங்கத்தின் கொள்கையை எதிர்த்து இந்த அரசாங்கத்தை விமர்சித்து வந்த முஸ்லீம் காங்கிரஸ் நாடாளுமன்றம் உறுப்பினருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பதவியும் வழங்கி இந்த அரசாங்கம் இன்னும் இன்னும் தமிழர்களைக் கேலியாக்கியுள்ளது. இவ்வாறாக அரசாங்கம் செயற்படுகையில் அதிகாரம் குறைந்த இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்று இவர்கள் ஏன் அரசுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும் என்ற…
The post நிதி இல்லாத இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும் -இரா.துரைரெட்ணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிதி இல்லாத இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும் -இரா.துரைரெட்ணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
