டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் பொலார்ட்!
21 view
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட சகலதுறை வீரரான கெய்ரன் பொலார்ட், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் அணியின் தலைவரான பொலார்ட், தனது ஓய்வுக் குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், ‘கவனமான ஆலோசனைக்குப் பிறகு, நான் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தேன். பல இளைஞர்களைப் போலவே, நான் 10 வயது சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே மேற்கிந்திய தீவுகள் அணியை பிரதிநிதித்துவப்படுத்துவது எனது கனவாக இருந்தது. மேலும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டை இரண்டிலும் (ஒருநாள் மற்றும் ரி-20) பிரதிநிதித்துவப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன். 2007ஆம் ஆண்டு எனது குழந்தைப் பருவ ஹீரோ பிரையன் லாராவின் தலைமையில் நான் சர்வதேச அரங்கில் அறிமுகமானதை நான் இன்னும் தெளிவாக நினைவுகூருகிறேன். அந்த மெரூன் நிறங்களை அணிந்துகொண்டு, அத்தகைய ஜாம்பவான்களுடன் இணைந்து விளையாடுவது எனக்கு கிடைத்த ஒரு பாக்கியம்’ என குறிப்பிட்டுள்ளார்.…
The post டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் பொலார்ட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் பொலார்ட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
