யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்!
5 view
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்புக் ( Bachelor of Science Honors in Physical Education) கற்கை நெறிக்கு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையிலும், விளையாட்டுத் துறை சார் திறமையின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு ( Orientation Programme) நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. யாழ். பல்கலைக் கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் விளையாட்டு விஞ்ஞானத் துறைத் தலைவர் கலாநிதி சி. சபா ஆனந் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, முன்னாள் துணைவேந்தரும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினருமான சிரேஷ்ட பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், முன்னாள் துணைவேந்தரும், வாழ்நாள் பேராசிரியருமான பொ. பாலசுந்தரம்பிள்ளை, இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடாதிபதி தெய்வி தபோதரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இவர்களுடன், பல்கலைக்கழகத்தின் பதிவாளர், நிதியாளர், நூலகர், மாணவர் நலச்சேவைகள் பணிப்பாளர், மாணவர் நலச்சேவைகள் உதவிப்பதிவாளர் உட்பட்ட…
The post யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
