ரம்புக்கனை சம்பவம் – 18 வயதுடைய சிறுவன் ICU இல் சிகிச்சை: வன்மையாகக் கண்டிப்பதாக GMOA தெரிவிப்பு

4 view
ரம்புக்கனையில் பொலிஸாரின் மிருகத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை உடனடியாக மேற்கொள்ளுமாறும்  அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 18 வயதுடைய சிறுவன் வயிற்று குழியில் காயங்களுடன் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ குறிப்பிட்டார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள அவர், உயிருள்ள வெடிமருந்துகளால் காயங்களுடன் 15 பேர் கேகாலை வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். கேகாலை வைத்தியசாலையில் உள்ள அவர்களது கிளை அலுவலகம் அந்த நோயாளிகளின் மார்புப் துவாரம் மற்றும் வயிற்றுத் துவாரத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் காயமடைந்துள்ளதாக தமக்கு அறிவித்ததாக அவர் கூறினார். 37 வயதுடைய ஒருவர் வயிற்றுப் பகுதியில் காயங்களுடன் ICUவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் 40 வயதுடைய ஒருவர் மார்புப் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதியில்…
The post ரம்புக்கனை சம்பவம் – 18 வயதுடைய சிறுவன் ICU இல் சிகிச்சை: வன்மையாகக் கண்டிப்பதாக GMOA தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース