வவுனியாவில் முதலை தாக்கி முதியவர் பலி!
1 view
வவுனியாவில் முதலை தாக்கியதில் சூடுவெந்தபுலவை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக உலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்றையதினம் மாடுகளை மேய்ப்பதற்காக பாவற்குளம் – சூடுவெந்தபுலவு பகுதிக்கு சென்ற வேளை அப்பகுதியில் காணப்பட்ட ஆற்றுப்பகுதியில் இறங்கிய போதே முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். இச்சம்பவத்தில் சூடுவெந்தபுலவினை சேர்ந்தமூன்று பிள்ளைகளின் தாயான 67 வயதுடைய ஆதம்பாவா முசிறியா என்பவரே பலியாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
The post வவுனியாவில் முதலை தாக்கி முதியவர் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் முதலை தாக்கி முதியவர் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.