கிளிநொச்சியில் மிளகாய் தோட்டங்களுக்குள் புகுந்து விசமிகள் வெறியாட்டம்…! நாசமான பல லட்சங்கள்…!
6 view
கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால், பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவரது மிளகாய் தோட்டங்கள் நேற்றிரவு(26) அழிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நேற்றிரவு 10 மணிக்கு பின்னர் அத்துமீறி நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர், காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய் செடிகளை பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்தும்,வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர். பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிறிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The post கிளிநொச்சியில் மிளகாய் தோட்டங்களுக்குள் புகுந்து விசமிகள் வெறியாட்டம்…! நாசமான பல லட்சங்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் மிளகாய் தோட்டங்களுக்குள் புகுந்து விசமிகள் வெறியாட்டம்…! நாசமான பல லட்சங்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
