சுவீடன் விமான நிலையத்தில் அநுரவுக்கு அமோக வரவேற்பு…!
8 view
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்றுமுன்தினம்(25) இரவு சுவீடனுக்குப் பயணமானார். இந்நிலையில் அநுரவிற்கு சுவீடன் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தில் சுவீடன் வாழ் இலங்கையர்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் இலங்கை நேரப்படி காலை 5 மணியளவில் சுவீடனில் NACKA AULA வில் அந்த நாட்டில் உள்ள புலம்பெயர் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சுவீடன் குழுவினால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
The post சுவீடன் விமான நிலையத்தில் அநுரவுக்கு அமோக வரவேற்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுவீடன் விமான நிலையத்தில் அநுரவுக்கு அமோக வரவேற்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
