திருமலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம்…!
5 view
திருகோணமலை தோப்பூர் உப பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலத்தோப்பூர் கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த வறுமைக் கோட்டின்கீழ் வாழும் 425 பயனாளிகளுக்கு இன்று(27) 10 கிலோ அரிசிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. பாலத்தோப்பூர் கிராம உத்தியோகத்தர் எம்.பர்சாத் தலைமையில் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் வைத்து இப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் பொதுமக்களுக்கு நாடளாவிய ரீதியில் இவ் அரிசி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
The post திருமலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
