முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை அபகரித்து சிங்கள குடியேற்றங்கள்…! ரவிகரன் குற்றச்சாட்டு…!

23 view
முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை அபகரித்து சிங்கள மக்கள் குடியமர்த்தபடுகிறார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். புதுக்குடியிருப்பில் இன்றையதினம்(25) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை ஆட்சியாளர்கள் அபகரித்து கொண்டிருக்கிறார்கள். அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பரப்பில் கூடுதலான நிலப்பரப்பினை ஒவ்வொரு திணைக்களங்களின் ஊடாகவும் அபகரித்து அவற்றில் சிங்கள மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கும் நிலையே காணப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 5 இலட்சத்தி தொண்ணூறாயிரம் ஏக்கரில் 74.24 வீதமான காணிகள் வன இலாகாவினுடைய பொறுப்பில் இருக்கின்றது.  தமிழ் ஆயுத போராட்ட காலத்தில்  இந்த பகுதிகளுக்கெல்லாம் வர பயந்து கொண்டிருந்த நிலையில்  2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் அடர்ந்த காடுகள் என்று கூறக்கூடிய அளவில் 36.72 வீதமான காணிகளும் அதாவது 2 இலட்சத்தி  இருபத்தி இரண்டாயிரத்தி ஆறு…
The post முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை அபகரித்து சிங்கள குடியேற்றங்கள்…! ரவிகரன் குற்றச்சாட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース