தமிழரசுக் கட்சி வழக்கு மே 31 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு..!!
5 view
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மே 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கின் ஏழு எதிராளிகளான கட்சியின் உத்தியோகத்தர்கள் மூன்று விதமான நிலைப்பாடுகளை எடுத்து தங்கள் ஆட்சேபனை மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். எட்டாவது எதிராளியாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட இரத்தினவடிவேல் தரப்பு தமது ஆட்சேபனையைத் தாக்கல் செய்யவும், எதிராளிகளின் ஆட்சேபனை மனுக்களைப் படித்து வழக்காளி தங்கள் தரப்பு கருத்தைச் சமர்ப்பிக்கவும் கால அவகாசம் அளித்து மே 31 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார் திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா. கட்சி யாப்புக்கு முரணாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், பொதுக்குழு வாக்களிப்பில் கடைசியாக 20 பேர் வரை சேர்க்கப்பட்டமை மாத்திரமே நேர்ந்த தவறு என்றும், ஆனால் அது கூட தலைவர் தெரிவின் முடிவை மாற்றவில்லை என்ற சாரப்படவும் தெரிவித்து ஆறாவது எதிராளியான சுமந்திரன் தமது ஆட்சேபனை மனுவை கடந்த தவணையின்போதே தாக்கல் செய்திருந்தார் என்பது தெரிந்ததே.…
The post தமிழரசுக் கட்சி வழக்கு மே 31 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழரசுக் கட்சி வழக்கு மே 31 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
