மக்கள் தொடர்பாடல் சேவை உத்தியோகத்தர்களிற்கு சைகைமொழி பயிற்சி ஆரம்பம்..!!
5 view
மக்கள் தொடர்பாடல் சேவை உத்தியோகத்தர்களிற்கு சைகைமொழி பயிற்சிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. செவிப்வுலனற்றோருக்கு உயரிய சேவையை வழங்கும் நோக்குடன் குறித்த பயிற்சியானது இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெயார் மெட் நிறுவனத்தின் அணுசரணையுடன ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த பயிற்சியானது டிசம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது. பொதுமக்கள் சேவையை பெற்றுக்கொள்ள வருகை தரும்பொது, செவிப்புலனற்றோருக்கு உயரிய சேவையை வழங்கும் நோக்குடன் குறித்த பயிற்சியானது கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் நான்று பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மக்களுடன் நேரடியாக சேவை வழங்கும் உத்தியுாகத்தர்களை அடையாளம் கண்டு குறித்த பயிற்சி வழங்கப்படுகின்றது. இதன் மூலம், எதிர்காலத்தில் செவிப்புலனற்றோரும் இலகுவாக சேவைய பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்படுவதுடன், அடுத்து ஏனைய உத்தியுாகத்தர்களிற்கும் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
The post மக்கள் தொடர்பாடல் சேவை உத்தியோகத்தர்களிற்கு சைகைமொழி பயிற்சி ஆரம்பம்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் தொடர்பாடல் சேவை உத்தியோகத்தர்களிற்கு சைகைமொழி பயிற்சி ஆரம்பம்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
