மைத்திரியின் தலைமைத்துவத்திற்கு பாரிய சவால்..! நீதிமன்றம் பிறப்பித்து உத்தரவு
21 view
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொண்டகு சரத்சந்திர சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிபதி திரு.சந்துன் விதான இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்நிலையில், விசாரணை முடியும் வரை இந்த நிரந்தர தடை நடைமுறையில் இருக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து அமைச்சர் மகிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தடை உத்தரவை நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பிட்டுள்ளது. குறித்த தடையுத்தரவானது எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி வரை நீடிக்குமாறு…
The post மைத்திரியின் தலைமைத்துவத்திற்கு பாரிய சவால்..! நீதிமன்றம் பிறப்பித்து உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மைத்திரியின் தலைமைத்துவத்திற்கு பாரிய சவால்..! நீதிமன்றம் பிறப்பித்து உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
