ரணிலுடன் மந்திராலோசனை நடத்திய பசில்; தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!
10 view
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, திரன் அலஸ், காஞ்சன விஜேசேகர ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளதோடு, மே தினத்திற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அதற்கு ஆதரவைப் பெற்றுக் கொள்ள அனைத்துத் தரப்பினரிடமும் எழுத்துபூர்வமாக கோரிக்கை விடுப்பதே சிறந்தது என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டலஸ் அழகப்பெரும குழுவினர் உள்ளிட்ட கட்சிகளை மீளக் கொண்டு வருவதற்கும் ஆதரவை பெறுவதற்கு பிரதமரின் தலையீடு…
The post ரணிலுடன் மந்திராலோசனை நடத்திய பசில்; தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலுடன் மந்திராலோசனை நடத்திய பசில்; தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
