போதை ஊசி செலுத்தி பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கும்பல் – யாழில் சம்பவம்

15 view
யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரின் தாய் தந்தையர் உயிரிழந்ததை அடுத்து,  குறித்த பெண்ணும், அவரது மூத்த சகோதரியும் பருத்தித்துறை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம், பெண்ணின் மூத்த சகோதரி உயிரிழந்த நிலையில், இவரது சகோதரன் இவரை தனது இல்லத்திற்கு அழைத்து சென்று இருந்தார். சகோதரனின் இல்லத்தில் தங்கியிருந்த வேளை ஐனவரி மாதம்  வீட்டில் ஆட்களற்ற வேளை உள்நுழைந்த கும்பல் ஒன்று போதைப் பொருளை வழங்கி, அதனை பலாத்காரமாக நுகர வைத்து, அடித்து துன்புறுத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். தொடர்ந்து வந்த நாட்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் பருத்தித்துறை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில்…
The post போதை ஊசி செலுத்தி பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கும்பல் – யாழில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース