வீட்டுத் திட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்! இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை
12 view
ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (23.04) இடம்பெறடற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது. இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை. எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று தற்போது வடக்கிற்கு…
The post வீட்டுத் திட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்! இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீட்டுத் திட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்! இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
