குளியலறையில் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணித் தாய்…! சிசுவும் உயிரிழப்பு..! வவுனியாவில் சோகம்…!

14 view
வவுனியா வைத்தியசாலை  விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி தாயொருவர் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்ததுடன், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று(22) காலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மதவாச்சி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விடுதியில் உள்ள குளியலறைக்கு அவர் சென்ற நிலையில் தவறி வீழ்ந்ததாகவும், இதனால் அவர் உயிரிழந்ததாகவும் தெரியயவருகின்றது. இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். எனினும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.  குறித்த சம்பவம் தொடர்பாக அறிவதற்காக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.  உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post குளியலறையில் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணித் தாய்…! சிசுவும் உயிரிழப்பு..! வவுனியாவில் சோகம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース