தியத்தலாவ கார் விபத்து; கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!
22 view
தியத்தலாவ கார் விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வாகன சாரதிகள் இருவருக்கும் விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதன்படி இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதவான் அன்டனி எஸ்.பீட்டர் ஃபால்ல் இன்று உத்தரவிட்டுள்ளார் இவர்கள் இருவரும் தியத்தலாவ நர்யகந்த ஃபாக்ஸ்ஹில் கார் பந்தயத்தில் நேற்று கலந்து கொண்ட போது இரு கார்களும் விபத்துக்குள்ளானதில் 8 வயது சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் படுகாயமடைந்து தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் அதில் சிலர் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
The post தியத்தலாவ கார் விபத்து; கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தியத்தலாவ கார் விபத்து; கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
