கெஹலிய உள்ளிட்ட 09 பேரும் விளக்கமறியலில்
27 view
தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேக நபர்களும் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் அழைக்கப்பட்ட போதே மாளிகாகந்த நீதவான் லோசினி அபேவிக்ரம இந்த உத்தரவை பிறப்பித்தார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி முன்வைத்த பிணை கோரிக்கை இதன்போது நிராகரிக்கப்பட்டுள்ளதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
The post கெஹலிய உள்ளிட்ட 09 பேரும் விளக்கமறியலில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கெஹலிய உள்ளிட்ட 09 பேரும் விளக்கமறியலில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
