இந்தியா – இலங்கையிடையே தரை வழிப்பாதை அமைக்கத் திட்டம்
8 view
இந்தியாவும் இலங்கையும் இணைந்து தரை வழிப்பாலத்தை அமைப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் தனியார் விருந்தகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இந்த தரைப்பாதை இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என்பதோடு நாடுகளுக்கு இடையிலான உறவில் மாற்றத்துக்கான வழியை ஏற்படுத்தும். சுற்றுலாவை மேம்படுத்துவது இரண்டு நாடுகளின் முக்கிய நோக்கமாக இருப்பதாக குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், இலங்கையைப் பொறுத்தவரை இது பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.
The post இந்தியா – இலங்கையிடையே தரை வழிப்பாதை அமைக்கத் திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியா – இலங்கையிடையே தரை வழிப்பாதை அமைக்கத் திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
