பொத்துவிலின் மூத்த அரசியல்வாதிகள் எம்மோடு இணைந்திருப்பது கட்சிக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது…! ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு…!
14 view
பொத்துவில் பிரதேசத்தில் உள்ள மூத்த அரசியல்வாதிகளும், சமூக சேவையாளர்களும் புதிதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்திருப்பது கட்சிக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (19) பொத்துவிலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது குறுகிய காலத்தில் உருவாகி சமூகத்திற்காக நல்ல பல பணிகளைச் செய்த ஒரு கட்சியாகும். கடந்த நான்கு வருடங்கள் இந்த கட்சியும், தலைமையும் பல இன்னல்களை சந்தித்தது. கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியோடு இல்லாமல் கட்சிக்கும் தலைமைக்கும் துரோகம் இழைத்துவிட்டு சென்றதனால் தலைமை மாத்திரம் கட்சியோடு இருக்கின்ற துர்ப்பாக்கிய நிலை கட்சிக்கு ஏற்பட்டது. ஆனால் கட்சியின் ஆதரவாளர்கள் இந்தக் கட்சியோடுதான் இருக்கின்றனர். இன்று கட்சியோடு புதிதாக பலர் இணைந்திருப்பது…
The post பொத்துவிலின் மூத்த அரசியல்வாதிகள் எம்மோடு இணைந்திருப்பது கட்சிக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது…! ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொத்துவிலின் மூத்த அரசியல்வாதிகள் எம்மோடு இணைந்திருப்பது கட்சிக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது…! ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
