சம்மாந்துறையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம் ஆரம்பம்…!
9 view
2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டில் நிலவிய மிகவும் கடினமான பொருளாதார நிலைமைக்கு மத்தியில் பாதிப்புக்குள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் ஊட்டச்சத்து மட்டத்தைப் பேணுவதற்கான தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவின் பிரதான நிகழ்வு நேற்றையதினம்(21) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் முஹம்மது ஹனீபா தலைமையில் கோரக்கல் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கி அந்த மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் முழு நாட்டையும் உள்ளடக்கும் விதமாக குறைந்த வருமானம் பெறும் சுமார் 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ கிராம் நாட்டு அரிசியை இரண்டு (02) மாத காலத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ் வேலைத்திட்டம் தேசிய ரீதியாக நேற்று (21) ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்கீழ், சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் சுமார் 12000ற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி…
The post சம்மாந்துறையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம் ஆரம்பம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்மாந்துறையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம் ஆரம்பம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
