கனடா கொலைச் சம்பவம் தொடர்பில் கைதான இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்…!
7 view
கனடாவின் ஒட்டாவா நகரில் இலங்கையைச் சேர்ந்த 06 பேரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் 19 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபர் பிணை கோரவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன . அவரது சட்டத்தரணியின் அறிக்கையை மேற்கோள்காட்டியே குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த சந்தேகநபருக்கு எதிராக 6 கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த சந்தேக நபரின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் இவான் லிட்டில், பிணைக் கோரி விண்ணப்பிக்கும் திட்டம் தற்போது சந்தேக நபருக்கு இல்லை என்றும் கனடாவில் கல்வி பயின்று வந்த குறித்த சந்தேகநபர், அடுத்த வாரம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
The post கனடா கொலைச் சம்பவம் தொடர்பில் கைதான இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனடா கொலைச் சம்பவம் தொடர்பில் கைதான இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
