விகாரையொன்றில் கைப்பற்றப்பட்ட முக்கிய பொருள்..! தேரர் அதிரடியாக கைது!
15 view
இமதுவ, பெகிரிஹேன பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றின் அறையிலிருந்து 18,000 மில்லி லீட்டர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இமதுவ பொலிஸார் தெரிவித்தனர். இமதுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கடந்த 17 ஆம் திகதி குறித்த விகாரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 57 வயதுடைய தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோத மதுபானத்தை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
The post விகாரையொன்றில் கைப்பற்றப்பட்ட முக்கிய பொருள்..! தேரர் அதிரடியாக கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விகாரையொன்றில் கைப்பற்றப்பட்ட முக்கிய பொருள்..! தேரர் அதிரடியாக கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
