வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்..!!
13 view
நோர்த் சீ எனப்படும் வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் மாலை இடம்பெற்றது. கடற்றொழில் அமைச்சினால் செயற்படுத்தப்படுகின்ற நிறுவனங்களில் ஒன்றான வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை சீராக முன்னெடுத்து, குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வலை உற்பத்தி செயற்பாடுகளை மேலும் விஸ்தரித்தல் மற்றும் இலாபத்தை ஈட்டும் வகையிலான பொறிமுறைகளை தயாரித்தல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. முன்பதாக கடந்த காலத்தில் இந்த நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் பாகுபாடுகள் இருந்தமையால் நிறுவனத்தின் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது. அத்துடன் ஊழியர்கள் துறைசார் தேவைக்கேற்ப நியமிக்கப்படாத நிலையும் இருந்துள்ளது. அதேவேளை வேலைத்திட்டம் நடைபெற்றதற்கான ஆவணங்கள் முழுமையாக காணப்படாத முழுமையாக செயலற்றுப்போன நிலை இருந்தது. அத்துடன் புதிய நிர்வாகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதனூடாகவே நேர்மையான உழைப்பை உருவாக்கிக்கொள்ள முடியும் என நிறுவனத்தின்…
The post வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
