முன்னாள் போராளியான ஆனந்தவர்ணன் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்…! கஜேந்திரன் எம்.பி வலியுறுத்து…!
5 view
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளியான ஆனந்தவர்ணன் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு நேற்றையதினம்(16) சென்ற பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணனை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். நேற்றையதினம் இடம்பெற்ற மேற்படி சந்திப்பு தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணன் கடந்த 2024.03.26 இல் கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு அன்றைய தினமே கைது செய்யப்பட்டு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் வெலிக்கடையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது முகநூலில் கடந்த 2020 இல் ஒரு படமும் 2022 இல் ஒருபடமும் பகிரப்பட்டதாகவும் அதன் மூலம் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் முயற்சி என்ற பொய்க் குற்றச்சாட்டினைச் சுமத்தி அவரைத் தடுத்துவைத்துள்ளனர். ஏற்கனவே அவர் சுமார் 9 ஆண்டுகள் கொடிய சிறையில் அடைக்கப்பட்டு…
The post முன்னாள் போராளியான ஆனந்தவர்ணன் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்…! கஜேந்திரன் எம்.பி வலியுறுத்து…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முன்னாள் போராளியான ஆனந்தவர்ணன் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்…! கஜேந்திரன் எம்.பி வலியுறுத்து…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
