அறநெறி பாடசாலை ஆசிரியர்களை அவமதிக்காதே…! மூதூரில் வெடித்தது போராட்டம்…!
5 view
மூதூர் பிரதேச தமிழ் அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (17) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மூதூரில் இயங்கிய 05 அறநெறிப் பாடசாலைகளை மூதூர் பிரதேச இந்துகுருமார் சங்கத்தின்கீழ் பதிவு செய்வதற்கு மூதூர் பிரதேச செயலக இந்துக் கலாச்சார உத்தியோகத்தரிடம் சென்றபோது அவர் அவ்வாறு பதிவு செய்ய முடியாது என தெரிவித்ததோடு, அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளுடன் தகாத வார்த்தை பிரயோகங்களுடன் நடந்து கொண்டதாகவும் தெரிவித்து இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் அறநெறி ஆசிரியைகளால் முன்னெடுக்கப்பட்டது. இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அறநெறி பாடசாலையின் ஆசிரியைகள் , சுலோகங்களை ஏந்தியவாறு 05 அறநெறிப் பாடசாலைகளையும் பதிவு செய், அறநெறி பாடசாலை ஆசிரியைகளை அவமதிக்காதே, அறநெறிப் பாடசாலையை வெளியேற்று,கலாச்சார உத்தியோகத்தரை வெளியேற்று உள்ளிட்ட கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்ட இடத்திற்கு மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக், திருகோணமலை மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் லக்குமிதேவி சிறிதரன் ஆகியோர்…
The post அறநெறி பாடசாலை ஆசிரியர்களை அவமதிக்காதே…! மூதூரில் வெடித்தது போராட்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அறநெறி பாடசாலை ஆசிரியர்களை அவமதிக்காதே…! மூதூரில் வெடித்தது போராட்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
