ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கவும் முடியாது…! சிங்கள வேட்பாளர்களை நம்பவும் முடியாது…! ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு..!
5 view
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பொதுவாகச் சிந்தித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பற்றி தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடம் பலவிதமான கருத்துக்கள் பரவுகின்றன. அந்தவகையில் ஒரு சாரார் இந்தத் தேர்தலை நிராகரிக்க வேண்டும், வாக்களிப்பைப் புறக்கணிக்க வேண்டும் என்கின்ற கருத்துக்களைத் தமிழ் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். இந்தக் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களுக்குத் தேர்தல் மூலமாக அவர்களது கருத்துக்களை, எண்ணங்களைச் சுதந்திரமாகத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது. அந்தவகையில் தேர்தலைப் புறக்கணிப்பதால் என்ன விபரீதம் இடம்பெறும் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். இதற்கு உதாரணமாக 2005 ஆம் ஆண்டு…
The post ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கவும் முடியாது…! சிங்கள வேட்பாளர்களை நம்பவும் முடியாது…! ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கவும் முடியாது…! சிங்கள வேட்பாளர்களை நம்பவும் முடியாது…! ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
