கிராமிய கலைகளை வளர்ப்பதற்கான புதிய அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு..!samugammedia
16 view
கிராமிய கலைகளை வளர்ப்பதற்கான புதிய அணுகுமுறைகளை கலாசார உத்தியோகஸ்தர்கள் பின்பற்ற வேண்டும் என வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண புதுவருட கொண்டாட்ட நிகழ்வு வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் இன்று (16/04/2024) நடைபெற்றது. ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக நிகழ்வில் கலந்து சிறப்பித்தார். புத்தாண்டு விழாவில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை கலாசார நிகழ்வுகளை கண்டுகளித்த ஆளுநர், பிரதம விருந்தினருக்கான உரையை ஆற்றினார். “இந்த வருடத்தில் வெற்றி அளிக்கக்கூடிய பயிர் செய்கையை வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ள முடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய குளங்கள் மற்றும் சிறு குளங்களின் நீர்மட்டம் போதுமானதாக காணப்படுகின்றமையால் இடைபோகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் போதுமான அளவு விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதன் ஊடாக நாங்கள் எங்களுடைய வறுமையிலிருந்து மீள்வதற்கான ஒரு சந்தர்ப்பமும் காணப்படுகிறது. இந்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்திலும் குளங்களை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல வடக்கு மாகாணத்தில்…
The post கிராமிய கலைகளை வளர்ப்பதற்கான புதிய அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு..!samugammedia appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிராமிய கலைகளை வளர்ப்பதற்கான புதிய அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு..!samugammedia appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
