நெடுந்தீவை அழிக்க மதுபான விற்பனை நிலையமா ?

12 view
நெடுந்தீவு மண்ணின் வரலாற்றில்  மதுபான விற்பனை நிலையம் காணப்பட்டதில்லை . அங்கு பரவலாக  பனங்கள்ளு  விற்பனையே காணப்படுகின்றது . பனங்கள்ளு பாவனை காரணமாக  அங்கு பெரிதாக வன்முறையேதும் இது வரைகாலமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை . ஆனாலும் அவ்வரலாற்று  மான்மியத்தை சீர்குலைப்பதற்காகவும் குடும்பங்களிடையே பிரச்சினைகளை உருவாக்குவதற்காகவும்  முதன்முறையாக  மதுபான விற்பனைக்கான அனுமதி நெடுந்தீவில் வழங்கப்பட்டிருப்பதாக  தீவக சிவில் சமூகம் அமைப்பின் பொருளாளர் கருணாகரன் குணாளன் கண்டனம் தெரிவித்துள்ளார் .  ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரின் ஆதரவிலேயே இவ் மதுபான விற்பனை அனுமதி  நெடுந்தீவிலுள்ள தனியார் விடுதியொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது .  இதுவரைகாலமும்  புங்குடுதீவிலுள்ள மதுபான விற்பனை நிலையத்திலிருந்து  அண்ணளவான சில மதுபான போத்தல்களையே மது  பாவனையாளர்கள் கொள்வனவு செய்து  நெடுந்தீவுக்கு எடுத்துச்செல்லும் வழமை காணப்பட்டிருந்தது .   ஆனால் தற்போது  தனியார் விடுதிக்கு வழங்கப்பட்டிருக்கின்ற  மதுபான விற்பனை அனுமதியூடாக  நெடுந்தீவில் மதுபாவனை எண்ணற்று அதிகரிக்கவுள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்…
The post நெடுந்தீவை அழிக்க மதுபான விற்பனை நிலையமா ? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース