இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 8 வீதி விபத்துக்கள் – 10 பேர் உயிரிழப்பு..!
13 view
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 8 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த வீதி விபத்துக்கள் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 8 விபத்துக்களில் 5 விபத்துக்கள் வீதியில் வாகனம் சறுக்கிச் சென்றதன் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, சாரதிகளின் கவனக்குறைவால் பல வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. போக்குவரத்து விதிமுறைகளை சாரதிகளை உரிய முறையில் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
The post இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 8 வீதி விபத்துக்கள் – 10 பேர் உயிரிழப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 8 வீதி விபத்துக்கள் – 10 பேர் உயிரிழப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
