புத்தாண்டை முன்னிட்டு கிளிநொச்சியில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு…!
11 view
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு நேற்றையதினம்(14) கிளிநொச்சியில் இடம்பெற்றது. கனகாம்பிகைக்குளம் தூயதமிழ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், கரைச்சி பிரதேச சபை செயலாளர் எஸ்.செல்வகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி வைத்தார். மாலை 3 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வு, இரவு நிறைவு பெற்றதுடன், பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், சறுக்கு மரம் ஏறுதல், தலையணைச்சண்டை, முட்டி உடைத்தல் உள்ளிட்ட கலாச்சார விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன், வெற்றியீட்டியவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
The post புத்தாண்டை முன்னிட்டு கிளிநொச்சியில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தாண்டை முன்னிட்டு கிளிநொச்சியில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
