புத்தாண்டில் வெடித்த மோதல்; இரு வாகனங்கள் தீயிட்டு எரிப்பு..! – யாழ்ப்பாணத்தில் பரபரப்பு சம்பவம்

8 view
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணிக்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. பட்டா ரக வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றுமே இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.  இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரியவருகிறது. புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற முறுகல் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக  விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.
The post புத்தாண்டில் வெடித்த மோதல்; இரு வாகனங்கள் தீயிட்டு எரிப்பு..! – யாழ்ப்பாணத்தில் பரபரப்பு சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース