கோணேஸ்வரர் ஆலயம் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு 400வது ஆண்டு நினைவுகூரல்!
7 view
இன்று போல் ஒரு தமிழ் புத்தாண்டு தினத்தன்று போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரம் அழிக்கப்பட்ட 400வது ஆண்டை நினைவுகூரும் வகையில் தென் கையிலை ஆதீனம் அகத்தியர் அடிகளார் தலைமையில் வடக்கு கிழக்கு பகுதி சிவனடியார்கள், கோணேஸ்வரர் ஆலயத்தில், ஞானசம்பந்தர் அருளிய பாடல்களை பாடி நினைவேந்தலை செய்தனர். தொடர்ந்து திருக்கையிலை ஆதீனம் தலைமை உரை ஆற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இந்த நினைவு தினத்தை, கோணேஸ்வரர் ஆலயம், இலங்கை பூராகவும் உள்ள சைவ அமைப்புகளை இணைத்து முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா. நந்தகுமார், ஆலயம் அழிக்கப்படுவதற்கு முன்னர் அழிக்கப்பட்ட வரலாற்று செய்திகளையும், இலங்கை மக்களது தலைமை கோவிலாக கோணேஸ்வரம் இருந்ததையும், ஆலயம் அழிவதை தடுப்பதற்கு அந்த காலத்தில் திருகோணமலை வாழ் சைவத் தமிழர்கள் செய்த தியாகத்தையும் கூறினார். திருகோணமலையின் சைவ அமைப்புக்கள் சார்பில் கலந்துகொண்ட சிவசங்கரன் (வைத்தியர்), கோணேஸ்வரர் கோவிலை சூழவுள்ள பகுதிகள் ஊர்களின் பெயர்கள் வருவதற்கு…
The post கோணேஸ்வரர் ஆலயம் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு 400வது ஆண்டு நினைவுகூரல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோணேஸ்வரர் ஆலயம் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு 400வது ஆண்டு நினைவுகூரல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
