புத்தாண்டு பாடலை திரிவுபடுத்தியோர் மீது சட்ட நடவடிக்கை..! அமைச்சர் எச்சரிக்கை
5 view
தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புத்தாண்டு பாடல் திரிபுபடுத்தப்பட்டிருப்பது குறித்து கலாசார அலுவல்கள் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் ஆலோசனையின் பேரில் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரோஹன பெத்தகே பாடிய புத்தாண்டு பாடலே இவ்வாறு திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, குறித்த பாடலை திரிபுபடுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
The post புத்தாண்டு பாடலை திரிவுபடுத்தியோர் மீது சட்ட நடவடிக்கை..! அமைச்சர் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தாண்டு பாடலை திரிவுபடுத்தியோர் மீது சட்ட நடவடிக்கை..! அமைச்சர் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.