மாட்டுடன் மோதிய மோட்டார் சைக்கிள்…! இருவர் படுகாயம்…!
4 view
திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி கம்பகொட்ட பகுதியில் இன்று(13) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். குறித்த இருவரும் மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் மட்டக்களப்பு- பாரதி லேன் பகுதியில் வசித்து வரும் யோகநாதன் அசோக்குமார் (40வயது) மற்றும் சுப்ரமணியம் சிவசுப்ரமணியம் (44வயது) ஆகிய இருவருமே காயம் அடைந்துள்ளதாக தெரியவருகின்றது. காயமடைந்த இருவரும் மொரவெவ பொலிஸாரால் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
The post மாட்டுடன் மோதிய மோட்டார் சைக்கிள்…! இருவர் படுகாயம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாட்டுடன் மோதிய மோட்டார் சைக்கிள்…! இருவர் படுகாயம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
