புதுக்குடியிருப்பில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் பரிதாப மரணம்…!
6 view
கைவேலி பகுதியில் நீர் தேக்கத்தில் மூழ்கி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் உள்ள பாலத்திற்கு கீழ் சுமார் பத்து அடி பள்ளத்தில் நீர் தேங்கி காணப்பட்டது. குறித்த பாலத்தில் அப்பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் வழமையாக குளித்து வந்த நிலையில் நேற்றையதினம்(11) குறித்த இடத்தில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இன்றையதினம்(12) சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், உடலத்தை பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். தேவிபுரம் பகுதியை சேர்ந்த முனிசாமி திருச்செல்வம் என்ற 57 வயதுடைய குடும்பஸ்தரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
The post புதுக்குடியிருப்பில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் பரிதாப மரணம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதுக்குடியிருப்பில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் பரிதாப மரணம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
