செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான மைதானம் அமைக்க திட்டம் : அமைச்சர் டக்ளஸ் களவிஜயம்
22 view
செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெற் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். யாழ்ப்பாணத்தை வரவேற்கும் செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெற் மற்றும் உதைபந்தாட்ட மைதானத்தை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ள நிலையில் அதற்கான அனுமதியை கோரி யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு திட்டமுன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். முன்னதாக குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட போது குறித்த பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் மழை நீர் வழிந்தோடும் வழிகள் இருப்பதால் அப்பகுதியில் மைதானங்களை அமைப்பதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து ஆராயப்பட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில்…
The post செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான மைதானம் அமைக்க திட்டம் : அமைச்சர் டக்ளஸ் களவிஜயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான மைதானம் அமைக்க திட்டம் : அமைச்சர் டக்ளஸ் களவிஜயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
