அக்கரைப்பற்றில் தீயில் கருகிய நபர் பலி – பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

12 view
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோலாவில்-02 பகுதியில் தீயில் கருகிய நபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளளார். குறித்த நபர் ஓலைகளால் வேயப்பட்ட வீட்டின் முன் அறையில்  நேற்று முன்தினம் (10) காலை தீயில் கருகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்  நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் மீதான பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், குறித்த நபர் கழுத்து வெட்டப்பட்டமையால் ஏற்பட்ட அதிக இரத்தப் போக்கின் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கமைய, இதுவொரு கொலை என தீர்மானிக்கப்பட்டுள்ளது குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக உயிரிழந்தவரின் 33 வயதான மனைவியும் அவருடன் தொடர்புகளை பேணிய 63 வயதான மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அக்கரைப்பற்றில் தீயில் கருகிய நபர் பலி – பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース