தீவிரமடைந்த குடும்ப தகராறு- பறிபோனது மனைவியின் உயிர்…! கணவனுக்கு ஏற்பட்ட நிலை…!
5 view
மீகஸ்பிட்டிய, உரகஸ்மன்ஹந்தியவில் உள்ள ஸ்டிக்கர் கடை ஒன்றில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று (11) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கடையின் உரிமையாளரின் மனைவியான 41 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர் தனது கணவருடன் குறித்த கடையில் வசித்து வந்துள்ள நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The post தீவிரமடைந்த குடும்ப தகராறு- பறிபோனது மனைவியின் உயிர்…! கணவனுக்கு ஏற்பட்ட நிலை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தீவிரமடைந்த குடும்ப தகராறு- பறிபோனது மனைவியின் உயிர்…! கணவனுக்கு ஏற்பட்ட நிலை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
