புத்தாண்டு காலத்தில் திடீரென உயரும் விலைவாசிகள்!
5 view
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் முட்டை, மீன் மற்றும் மரக்கறிகள் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் முட்டை ஒன்றின் மொத்த விலை தற்போது 50 ரூபாயாகவும், சில்லறை விற்பனையில் 55 ரூபாயாகவும் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இடைநிலை வியாபாரிகள் முட்டையின் விலையை உயர்த்துவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த சில நாட்களாக மிகவும் குறைந்திருந்த காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த நாட்களை விட மீன் விலையும் ஓரளவு அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post புத்தாண்டு காலத்தில் திடீரென உயரும் விலைவாசிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தாண்டு காலத்தில் திடீரென உயரும் விலைவாசிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
