துணியால் சுற்றப்பட்டு கல்லில் கட்டி ஏரியில் எறியப்பட்ட சடலம்! இலங்கையை உலுக்கிய கொலை – சிக்கிய மனைவி மற்றும் மகன்
5 view
குடும்ப தகராறு காரணமாக கணவனை மனைவி கொலை செய்ததுடன், இக்கொலையை மறைக்க தாய்க்கு மகன் உதவிய சம்பவம் இலங்கையை உலுக்கியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அனுராதபுரம் ஹிதோகம திவுல் ஏரியில் நேற்று (09) சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதுடன், அது முற்றாக பல துணிகளில் சுற்றப்பட்டு கிரானைட் கல்லில் கட்டி ஏரியில் விடப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதன்படி, பொலிஸாரால் மேற்கொண்ட தேடுதலின் போது, உயிரிழந்தவர் தங்கஹகடவல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. குறித்த நபரின் பிரேத பரிசோதனையில் அவர் கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், கொலை செய்யப்பட்ட நபரின் 39 வயது மனைவி மற்றும் 24 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையின் பின்னர் சடலத்தை ஏரிக்கு எடுத்துச் சென்ற முச்சக்கர வண்டியையும் பொலிஸார் வீட்டில் இருந்து மீட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கடந்த…
The post துணியால் சுற்றப்பட்டு கல்லில் கட்டி ஏரியில் எறியப்பட்ட சடலம்! இலங்கையை உலுக்கிய கொலை – சிக்கிய மனைவி மற்றும் மகன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துணியால் சுற்றப்பட்டு கல்லில் கட்டி ஏரியில் எறியப்பட்ட சடலம்! இலங்கையை உலுக்கிய கொலை – சிக்கிய மனைவி மற்றும் மகன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
